கரூர் SDPI கட்சியின் அரசியல் பயிலரங்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல ஆலோசனைக் கூட்டம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 March 2024

கரூர் SDPI கட்சியின் அரசியல் பயிலரங்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல ஆலோசனைக் கூட்டம்.


கரூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக அரசியல் பயிலரங்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று 10.03.2024 மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது; இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் பாதர்.மார்க் அவர்கள் முன்னிலை வகித்தார், மாநிலத் துணைத் தலைவர் B.அப்துல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார், மாவட்டத் துணைத் தலைவர் ஜாபர் அலி வரவேற்றார், மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் அஜீஸ்  நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் பாஷா,  ஜாஃபர் அலி, பள்ளப்பட்டி நகர்மன்ற உறுப்பினர் ஜமீலா ஃபிர்தௌஸ், லிங்கம நாயக்கன்பட்டி கவுன்சிலர் ஷேக் ஃபரீத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், கரூர் நகர தலைவர் இஸ்மாயில்,  பள்ளப்பட்டி நகர தலைவர் மாலிக்தீன், குளித்தலை நகர துணை செயலாளர் ஹபீப், நகர நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad