கரூர் கவிஞருக்கு தூய தமிழ்ப் பற்றாளர் விருது. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 March 2024

கரூர் கவிஞருக்கு தூய தமிழ்ப் பற்றாளர் விருது.


தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சியைத் துறை சார்பில் ஆண்டு தோறும் தூய தமிழ்ப் பற்றாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது, இந்த ஆண்டுக்கான தூய தமிழ்ப் பற்றாளர் விருது சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 21 நபர்களுக்கு வழங்கப்பட்டது.அதில் கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த அரசு கலைக் கல்லூரியில் தமிழ் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மாணவர் கவிஞர் கருவை ந.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தி துறை அமைச்சர்  சாமிநாதன் அவர்களால்  வழங்கப்பட்டது.

விருது பெற்றமை பற்றி தூய தமிழ் பற்றாளர் கவிஞர் ந.ஸ்டாலின் அவர் கூறுகையில், வணக்கம் ... நான் கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த கருவை ந.ஸ்டாலின். தற்போது கரூர் அரசு கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன். தமிழ்நாடு அரசு - செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் எழுத்து மற்றும் பேச்சு இரண்டிலும் நடைமுறையிலும் தூய தமிழில் பேசுவோரை ஊக்கப்படுத்த தூய தமிழ் பற்றாளர் என்ற விருதினை வழங்கி சிறப்புச் செய்கிறது. 


அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 21 நபர்களுக்கு தூய தமிழ்ப்பற்றாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் (07.03.2024) இன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் கரங்களால் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞரும் ஆதன் பதிப்பக நிறுவனருமான கருவை ந.ஸ்டாலின்  என்கின்ற நான் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இன்று அரசின் தூயதமிழ்ப்பற்றாளர் விருதினையும் 20,000 ரூபாய் பரிசுத்தொகையையும்  பெற்றேன். 


விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு.அருள் நடராஜன் அவர்களும் அரசு செயலர், முனைவர். இல.சுப்ரமணியன் அவர்களும் பங்கேற்று விருதுகளை வழங்கி சிறப்புச் செய்தனர் என்று மகிழ்வுடன் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad