தேசிய மக்கள் நீதிமன்றம்: கரூர் மாவட்டத்தில் 1370 வழக்குகளுக்குத் தீர்வு. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 11 March 2024

தேசிய மக்கள் நீதிமன்றம்: கரூர் மாவட்டத்தில் 1370 வழக்குகளுக்குத் தீர்வு.


தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் ஐந்து அமர்வும் குளித்தலையில் ஒரு அமர்வும் மற்றும் அரவக்குறிச்சியில் ஒரு அமர்வும் என மொத்தம் 7 அமர்வுகள் நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 1493 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1370 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.15,77,90,988/- தொகை வழங்கப்பட்டது.

இதனை முதன்மை மாவட்ட நீதிபதி R. சண்முகசுந்தரம், துவக்கி வைத்தார். இதில் நீதிபதிகள், பார் அசோசியேசன் நிர்வாகிகள்,அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் /சார்பு நீதிபதி பாக்கியம் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad