தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கரம்பயம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவர், தனது காரில் ரூ.4.80 லட்சம் எடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால், அவரிடம் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லை என்பதால் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று அதே சோதனை சாவடியில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது காரில் ஆவணங்கள் இன்றி ரூ.1.03 லட்சம் எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.5.83 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் குளித்தலை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment