கரூர் மாவட்டத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படவுள்ளது. அதே போன்று, தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 24×7 மணி நேரமும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையும்செயல்படவுள்ளது. கரூர் மாவட்டதில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்கும்.
வாகன சோதனைகளில் ஈடுபடுவதற்கும் முதற்கட்டமாக 12 பறக்கும் படைகள்(Flying Surveillance Team) மற்றும் 12 நிலைகண்காணிப்பு குழுக்கள் (Static SurveillanceTeam) உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. அதேபோன்று, 04 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் (Video Viewing Team(, 04 و Sum ufo && (Video Surveillance Team) உதவிகணக்குக் குழுக்களும் (Accounts Team). ஊடக மையத்திற்கு ஊடகசான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் பறக்கும் படைகள். நிலை கண்காணிப்புக் குழுக்கள் நாள்தோறும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி மேற்கொள்ளவும். தொடர்புடைய படிவங்களில் அறிக்கைகளை அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி -தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. சமூக ஊடகங்கள். கல்லூரிகள்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக, இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தி செல்பி பாயிண்ட், தொடர் ஓட்டங்கள். இரு சக்கரவாகனப் பேரணிகள். கையெழுத்து இயக்கம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அனைத்து நிலை அலுவலர்களும் தங்களது பணிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சையதுகாதர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன். தனி வட்டாட்சியர் (தேர்தல்) முருகன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment