கரூர் மாவட்டத்தில் நீர் பாசன ஆதாரங்கள் தூர்வாரும் பணி: உயர் அதிகாரி ஆய்வு. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 6 March 2024

கரூர் மாவட்டத்தில் நீர் பாசன ஆதாரங்கள் தூர்வாரும் பணி: உயர் அதிகாரி ஆய்வு.


கரூர் மாவட்டத்தில் நீர் பாசன ஆதாரங்களை தூர்வாரும் விதமாக 19 பணிகள் ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் 85.15 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் ஆய்வு செய்தனர்.

இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில நிர்வாக ஆணையர் கூறுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆதாரங்களை தூர்வாரிட திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 11 மாவட்டங்களில் ரூ.95.00 கோடிக்கு 454233 கிலோ மீட்டர் தூரம் வரை 823 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட தமிழ்நாடு அரசால் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ. 3.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டம் மூலம் 14 பணிகள் 5315 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.276 கோடி மதிப்பீட்டிலும், அரியாறு வடிநில கோட்டம் மூலம் 5 பணிகள் 32 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.110 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட பாசன தண்ணீரானது “அ” பிரிவு வாய்க்கால்களான தென்கரை வாய்க்கால் மற்றும் நங்கம்கிளை வாய்க்கால்கள் மூலம் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8000 ஏக்கர் விளைநிலங்களுக்கு தடையின்றி கடைமடை வரை சென்றடைவது உறுதி செய்யப்படும்.


வடிகால் வாரிகளை தூர் வாருவதன் மூலம் மழை காலங்களில் வெள்ள நீர் விளை நிலங்களில் சென்று பாதிப்பு ஏற்படுத்துவது தடுக்கப்பட்டு வெள்ளத்தால் பயிர் சேதம் மற்றும் பொருள்சேதம் ஏற்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும். ஏரிகளுக்கு வரும் வழங்கு வாய்க்கால்கள் தூர் வாருவதன் மூலம் மழை காலங்களில் வரும் மழைநீர் வீணாகாமல் ஏரிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யப்படும். தூர்வாரும் பணிகள் அனைத்தும் வருகின்ற மே 20 க்குள் முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.


அந்த வகையில் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் மற்றும் திருக்காம்புலியூர் கிராமங்களில் செல்லும் தென்கரை கால்வாய் 3.80 கி.மீ தூர்வாரும் பணி ரூ.22 இலட்சம் மதிப்பீட்டிலும். குளித்தலை வட்டம் வைகநல்லூர் இராஜேந்திரம் கிராமங்களில் செல்லும் குளித்தலை காட்டுவாரி 3.40 கிமீ தூர்வாரும் பணி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், குளித்தலை வட்டம் மருதூர் கிராமத்தில் செல்லும் சிவாயம் வாரி 245 கி.மீ தூர்வாரும் பணி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், கடவூர் வட்டம் மேலப்பகுதி பண்ணப்பட்டடி ஏரி வரத்து வாரிகள் 6 கி.மீ தூர்வாரும் பணி ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும், குளித்தலை வட்டம் கழுகூர் ஏரி 10 கி.மீ தூர்வாரும் பணி ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டு உரிய காலத்தில் தரமாக செய்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பொதுப்பணித்தறை நீர்வளம் செயற்பெறியாளர் தமிழ்செல்வன்,உதவி செயற்பெறியாளர் கோபிகிருஷ்ணன், உதவிப் பொறியாளர்கள் கார்திக்,பத்மாதேவி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad