பயிற்சி மைய குழந்தைகள் சுற்றுலா, - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 6 March 2024

பயிற்சி மைய குழந்தைகள் சுற்றுலா,


தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் கற்றுலாத்துறை மூலம் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் உள்ளூர் சுற்றுலா அழைத்துச் செல்வப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிலும் 30 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள். சிறப்பாசிரியர்கள். உதவியாளர்கள் உள்ளிட்ட 65 நபர்கள் ஒரு நாள் உள்ளூர் சுற்றுலாவாக எஜமான் பண்ணை ஆலத்தூர் கிராமம் குளித்தலை வட்டம் என்ற இடத்திற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவங்கி வைத்தார்.


முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஒரு இலட்சம் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு 2000 விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் மற்றும் மன்மங்கலம் வட்டத்தில் 534 பயனாளிகளுக்கும். புகழுர் வட்டத்தில் 356 பயனாளிகளுக்கும். அரவக்குறிச்சி வட்டத்தில் 280 பயனாளிகளுக்கும். குளித்தலை வட்டத்தில் 654 பயனாளிகளுக்கும், கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்டத்தில் 585 பயனாளிகளுக்கும். மொத்தம் 2418 பயணளிகளுக்கு விலையில்லா விட்டுமனைப்பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார்.


கரூர் எம்.பி. ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சண்முகவடிவேல், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி,மாவட்ட சுற்றுலா அலுவலர் காமிழ்அன்சாரி, கரூர் வட்டாட்சியர் திருமுனிராஜ் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad