எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வளர்ச்சியடைந்த பாரதம் எனும் உன்னத நோக்கை அடைய மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
அதில், மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில், உழவர் சந்தை அருகிலும், கரூர் தெற்கு மாநகர தலைவர் ரவி அவர்கள் தலைமையில், ராயனூரிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளரும் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவருமான செந்தில்நாதன் பொதுமக்களிடம் ஆலோசனை மனுக்களை பெற்றார். பொதுமக்கள் ஆலோசனைகளை தங்கள் கைப்பட எழுதி ஆலோசனைப் பெட்டியில் வைத்து அனுப்பினர். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment