ஆதார்-பயோ மெட்ரிக் புதுப்பித்தல் முகாம்: பள்ளிகளிலேயே நடத்த ஏற்பாடு - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 February 2024

ஆதார்-பயோ மெட்ரிக் புதுப்பித்தல் முகாம்: பள்ளிகளிலேயே நடத்த ஏற்பாடு

 


ஆதார்-பயோ மெட்ரிக் புதுப்பித்தல் முகாம்: பள்ளிகளிலேயே நடத்த ஏற்பாடு


தாந்தோணி ஒன்றியம், தாந்தோணி மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான ஆதார் சேவை மையம், எல்காட் மூலம் பள்ளிக்கல்வித்துறை. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் ஆதார் பதிவு மையம், புதிய ஆதார் விண்ணப்பித்தல் மற்றும் பயோ மெட்ரிக் புதுப்பித்தல் முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவிக்கையில், பள்ளிக் கல்வித்துறை பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பை ELCOT அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் சேர்க்கை மையத்திற்கு பள்ளி மாணவர்கள் பயணிக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும்.


பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் கோவையில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கரூர் மாவட்ட எல்காட் நிறுவனத்திடம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் பெறப்பட்ட 16 பதிவு / அப்டேட்டிங் கிட் ஒப்படைக்கப்பட உள்ளது. அதை மாவட்ட நிர்வாகத்தால் திறம்பட சேவையில் அமர்த்தி, எல்காட் கிளை மேலாளர்கள் பதிவு / புதுப்பித்தல் பணியை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து 16 கருவிகளையும் 15.03.2024க்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


மேலும், நேரடி பயன் பரிமாற்றம் (DBT) முறையில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தத் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யுமாறு தெரிக்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவு / ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. மேற்காண் 16 கருவிகளை கொண்டு அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் மையம் தொடங்க வேண்டும்.


கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1069 பள்ளிகள் உள்ளன. அதில் 822 அரசு பள்ளிகள். 60 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 187 தனியார் பள்ளிகளாக செயல்படுகின்றன. LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 1, 64,592 மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இவர்களில் சுமார் 11874 மாணவ/மாணவியருக்கு ஆதார் எண் பெறப்படாமல் உள்ளது. ஆதார் பெறாமல் உள்ள குழந்தைகளில் 4598 மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், 534 மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 6742 மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். மேலும் இவர்களில் சுமார் 4446 குழந்தைகள் மழலையர் வகுப்புகளில் உள்ளனர். இம்மாணவர்கள் ஆதார் பதிவு மேற்கொள்ளும்பொருட்டு அவர்கள் பயிலம் பள்ளிகளுக்கே சென்று ஆதார் பதிவு / ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நோக்கத்திற்காக எந்த குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்திட மேற்காண் 16 கருவிகளை கொண்டு அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளியில் மையம் துவங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1069 பள்ளிகள் உள்ளன. இதில் 822 அரசு பள்ளிகள், 60 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 187 தனியார் பள்ளிகளாக செயல்படுகின்றன. LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 1, 64,592 மாணவ மாணவியர் பயின்று வருகிறார்கள். இவர்களில் சுமார் 11874 மாணவ/மாணவியருக்கு ஆதார் எண் பெறப்படாமல் உள்ளது. ஆதார் பெறாமல் உள்ள குழந்தைகளில் 4598 மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், 534 மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 6742 மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் பயின்று வருகின்றனர். மேலும் இவர்களில் சுமார் 4446 குழந்தைகள் மழலையர் வகுப்புகளில் உள்ளனர். இம்மாணவர்கள் ஆதார் பதிவு மேற்கொள்ளும் பொருட்டு அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கே சென்று ஆதார் பதிவு / ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.


இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை)காமாட்சி உதவி திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி) சக்திவேல், தாந்தோணி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் செட்டி, ELCOT மேலாளர் ராம் குமார் கலந்துகொண்டனர்.


செய்தி மற்றும் விளம்பரம் தொடர்புக்கு கரூர் மாவட்ட செய்தியாளர் ந.பார்த்திபன் 9894452180

No comments:

Post a Comment

Post Top Ad