கரூர் மாவட்டத்தில் 33 மழைமானி நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கம் - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 February 2024

கரூர் மாவட்டத்தில் 33 மழைமானி நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கம்

 


கரூர் மாவட்டத்தில் 33 மழைமானி நிலையங்கள் அமைக்கும் பணி துவக்கம்



தமிழ்நாடு முழுவதும் பெய்யும் மழையின் அளவினை துல்லியமாக அறியும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் (Automatic Rainguage Station:) (Automatic Weather Station) அமைக்க அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கரூர் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவினை கணக்கிடும் பொருட்டு புதிதாக 33 புதிய தானியங்கி மழைமானி நிலையங்கள் (ARG) நிறுவுவதற்கு தகுதியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதனைத் தொடர்ந்து கரூர்மாவட்டம் முழுவதிலும் தாலுக்கா வாரியாக அரவக்குறிச்சி வட்டம் 06, மண்மங்கலம் வட்டம்-03. புகழூர் வட்டம் 05, குளித்தலை வட்டம்- 06. கிருஷ்ணராயபுரம் வட்டம் 05 மற்றும் கடவூர் வட்டம் 08 ஆகமொத்தம் 33 மழைமானி நிலையங்கள் (ARG)புதிதாக அமைக்கப்படவுள்ளது.



அதன்படி, முதற்கட்டமாக தானியங்கி மழைமானி அமைக்கும் பொருட்டு இன்று கரூர் வட்டம், வெள்ளியணை குறுவட்டம் வெள்ளியை வடக்கு கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தானியங்கி மழைமானியை சுற்றி கம்பிவேலி அமைக்கும் பணிகள் உடனடியாக துவங்கப்படஉள்ளது.



எனயே கரூர் மாவட்டத்தில் தானியங்கி மழைமானிகள் (ARG) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும். விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். 



கரூர் மாவட்ட செய்தியாளர் ந.பார்த்திபன்

No comments:

Post a Comment

Post Top Ad