கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் இனுங்கூரில் உள்ள மாநில விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 February 2024

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் இனுங்கூரில் உள்ள மாநில விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

 


கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் இனுங்கூரில் உள்ள மாநில விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது. 



தமிழ்நாடு அரசு ஏற்கனவே கரூர் மாவட்டத்திற்கு புதியவேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துவங்குவதற்கு எந்த இடத்தில் என்று குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசு அரசாணை G.O. Ms. No. 256 நாள் 23-12-2021 -யின் படி அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்தாவது கரூர் மாவட்டத்திற்கு என்று அறிவிக்கப்பட்ட புதிய வேளாண்மை கல்லூரியை டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு அரசின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு கருணாநிதி முதல் முறையாக குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1957-1962 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்ததன் நினைவு பரிசாக,கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி இனுங்கூரில் உள்ள மாநில விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க திருத்தப்பட்ட அரசாணை பிறப்பிக்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.  



காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காவேரி படுகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர்,  பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 



கரூர் மாவட்ட செய்தியாளர் ந.பார்த்திபன்

No comments:

Post a Comment

Post Top Ad