கரூர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்: மார்ச் 3ம்தேதி நடைபெறுகிறது. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 February 2024

கரூர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்: மார்ச் 3ம்தேதி நடைபெறுகிறது.

 


கரூர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்: மார்ச் 3ம்தேதி நடைபெறுகிறது.


கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவிர பஸ் போலியோ சொட்டு மருத்து வழங்கும் சிறப்பு முகாம் 03.03.2024 அன்று நடைபெறுவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.கரூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்.சந்தோஷ்குமார்.முன்னிலை வகித்தார்.


இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, நம் கரூர் மாவட்டத்தில் 831 மையங்களில் (கூடுதல் மையங்கள் உட்பட) சொட்டு எருந்து முகாம்கள் நடைபெற உள்ளன அதில், கிராமப்பகுதியில் 726. நகராட்சிப்பகுதியில் 105 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்னை. இந்த முகாம்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.


இம்முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இதற்கு முன் எத்தனை தடவை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இச்சொட்டு மருந்து கூடுதல் தவணையாகக் கொடுக்கப்படுகிறது. சமுதாயத்திலிருந்தே போலியோ நோய் கிருமியை இல்லாமல் செய்வதே இத்திட்டத்தில் தலையாய நோக்கலாகும்.


தமிழ்நாட்டில் கடந்த 19 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் 24 ஆண்டுகளாக போலியோ நோயினால் ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை நோயற்ற இதே நிலையை தக்கலைத்துக்கொள்ள நாடுதழுவிய தீவிர போலியோ சொட்டு மருந்து போடப்படும் 03.03.2024 அன்று 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து போடவேண்டியது மிக அவசியமாகும்.


எனவே, இங்குள்ள குழந்தைகளுடன் இடம் பெயர்வோர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமானப் பணிகள் மற்றும் இதர பணிகளுக்காக தற்காலிகமாக குடிவந்தோர் தங்கியுள்ள பத்திகளில் உள்ள குழந்தைகளிலும் ஒரு குழந்தை கூட விடுபடாமல் சொட்டு மருந்து போடுவது அவசியமாகிறது. மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அனைந்துக் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புக்கனை சேர்ந்த பணியாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் போன்ற துறைகளைச் சார்ந்த சுமார் 3417 நபர்கள் இம்முகாம் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கண்காணிப்பதற்காக பணிக்கப்பட்டுள்ளனர். 100 மேற்பார்வையாளர்கள் பணிக்கப்பட்டு உள்ளனர்.


வெளியூர் பயணம் செய்யும் மக்களும் பயன்பெற ஏதுவாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் 03.03.2024 முதல் 3 தினங்களுக்கும் இடைவிடாமல் 24 மணிநேரமும் செயல்படும். இந்த Trans Booth இடங்களிலும் குளித்தலை நகராட்சியில் இடத்திலும் செயல்படும். மாநகராட்சியில் 3


இதற்கு முன்பு எத்தனை முறை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் முழுமையாக சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கும். லேசான சுகவீனம் மற்றும் புதியதாக பிறந்த குழந்தைகளுக்கும். இடம் பெயர்த்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் 03.03.2024 அன்று சொட்டு மருந்து வழங்க வேண்டியது அவசியமாகும்.


மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒரு குழந்தை கூட விடுபடாமல் சொட்டு மருத்து வழங்கப்பட்டால்தான் இத்திட்டத்தின் நோக்கம் முழுமையடையும் என்றும் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பங்கேற்பு செய்யவும். அங்கன்வாடி பணியாளர்களை முழு அளவில் இம்முகாம்களில் பங்கேற்று பணியாற்றவும் போதுமான விளம்பரம் செய்து தன்னார்வ தொண்டர்களை ஒருங்கிணைத்து Transit Booth மற்றும் மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கவும் தொண்டு நிறுவனங்கள் முகாம் நடைபெற விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தன்னார்வ பங்கேற்பு போன்றவை மூலம் தீவிரமாக பணியாற்றி போலியோ இல்லாத கரூர் மாவட்டமாக தொடர்ந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad