கரூர் அமராவதி வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

கரூர் அமராவதி வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

 


கரூர் அமராவதி வியாபாரிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது


கரூர் அமராவதி வியாபாரிகள் நல சங்கத்தின் 2வது பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டலில் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சிவசங்கர் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். பொருளாளர் மகேஷ்குமார் வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலாளர் செல்வம், துணை தலைவர் ஆடிட்டர் முத்துராமன், துணை தலைவர் தெய்வ சேனாதிபதி,செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மேலை பழனியப்பன், வியாபார வெற்றிக்கு வழி மாற்றமே துணை செயலாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.


பொதுக்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது


1.திருச்சி, கரூர், கோவை தேசிய நெடுஞ்சாலை 6 வழி சாலை பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


2.உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் சோதனை செய்யும் பொழுது முறையான சோதனை செய்ய வேண்டும் மற்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் கடுமையான சாத்துக்கள் நீக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது.


3.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழைய பேருந்து நிலையம் ஜவஹர் பஜார், பிரம்ம தீர்த்தம் ரோடு கோவை ரோடு செங்குந்தபுரம் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகள் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது.


4.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடை மற்றும் தொழில் நிறுவனங்களில் 18 வயது பூர்த்தி அடையாத குழந்தை மற்றும் வளரினம் பருவ தொழிலாளர்கள் பணி அமர்த்த மாட்டோம் என தீர்மானிக்கிறது.


5.நாடு முழுவதும் அத்தியாவசிய உணவு பொருளான அரிசி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விலை உயர்வு கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை செய்வதை தடை செய்ய வேண்டும். மேலும் சாமான்ய மக்கள் அனைவரும் தங்களின் குடும்ப தேவைக்கு 25 கிலோவை விட குறைவாகத்தான் அரிசி வாங்குகின்றனர். மக்களின் அத்தியாவசிய உணவு பொருளான அரிசிக்கு விதிதுள்ள 5% GST வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.


6.கரூரில் இருந்து கோயமுத்தூருக்கு பொதுமக்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கல்வி, மருத்துவம், வணிகம் சம்மந்தமாக தினமும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆகையால் நேரடியாக ரயில்வே பாதை அமைத்து ரயில் போக்குவரத்தை உருவாக்கி தர வேண்டும் எனவும் மத்திய அரசை கேட்டுக்கொள்வது.


7.கரூர் மாவட்ட அரசு பொது மருத்துவமணை 100 ஆண்டு காலம் பழமை பெற்றது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த அரசை கேட்டுக் கொள்வது.


8.கரூர் நகர கடைவீதி வியாபாரிகள் 1892ம் ஆண்டு முதல் கடைகள் மற்றும் வீட்டு மனைகள் கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து கட்டிடங்கள் கட்டி கடந்த 140 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில் சார்பாக தேவையற்ற வழக்குகள் பதிவு செய்து உள்ளார்கள். இது தொடர்பாக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து நில உரிமையாளர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டு கொள்ளலாம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


9.தமிழகத்தில் சில்லரை தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி அறிவித்த பிறகும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன‌.

No comments:

Post a Comment

Post Top Ad