கரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 January 2024

கரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர்.


கரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து  உரிய நபர்களிடம்  ஒப்படைத்த சைபர்  கிரைம்  காவல்துறையினர்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் 27.01.2024 இன்று கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 300க்கும் மேற்பட்ட செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


கரூர் மாவட்ட தாலுகா  மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட 54 லட்சம் மதிப்புள்ள 300க்கும் மேற்பட்ட செல்போன்களை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நபர்களை 27.01.2024 இன்று நேரில் வரவழைத்து திருடுபோன செல்போன் மற்றும் பொருட்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


மேலும் பொதுமக்கள் மொபைல் போனில் வரும் லிங்க்,யூடியூப் விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்களின் பணம்  01 கோடியே 07 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களால் இழந்த   நபர்களுக்கு  ஒப்படைக்கப்பட்டது.


தொலைந்து மற்றும் திருடுபோன பொருட்களை விரைவாக கண்டுபிடித்து   சிறப்பாக செயல்பட்ட  தலைமையிடம் (பொறுப்பு) சைபர்  கிரைம் கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் பிரேமானந்தன், மற்றும்   காவல் ஆய்வாளர் அம்சவேணி, உதவி ஆய்வாளர் சுதர்சனன் மற்றும் காவலர்கள் அனைவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad