இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா முன்னிட்டு, இன்று கரூர் மாநகராட்சி வளாகத்தில் குடியரசு தின விழா - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 January 2024

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா முன்னிட்டு, இன்று கரூர் மாநகராட்சி வளாகத்தில் குடியரசு தின விழா

 


இந்தியாவின்  75 ஆவது குடியரசு தின விழா முன்னிட்டு, இன்று கரூர் மாநகராட்சி வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் மாநகராட்சி ஆணையர் திருமதி. சுதா அவர்கள் தலைமையில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் முன்னிலை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்இந்நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் ரவி வரவேற்புரையாற்றினார். துணை தாரணி சரவணன்,ஆணையர் சுதா,மண்டல தலைவர்கள் அன்பரசன்,ராஜா,மாமன்ற உறுப்பினர்கள் பசுவை சக்திவேல் மற்றும் வேலுச்சாமி  அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து  கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி  கௌரவிக்கப்பட்டது. மாநகர் நல அலுவலர் இலட்சிய வர்ணா நன்றியுரை வழங்க விழா இனிதே நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது.இவ்விழாவில் உடன் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்தொடர்ந்து மாநகராட்சி அலுவலக எதிரிலுள்ள ஆசாத் பூங்காவில் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad