கடவூர் ஒன்றியம் வானகத்தில் திருமதி. சுதா அவர்கள் எழுதிய கம்பராமாயணத்தில் வேளாண் மரபுகள் என்ற நூல் வெளியிடப்பட்டது. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 5 November 2023

கடவூர் ஒன்றியம் வானகத்தில் திருமதி. சுதா அவர்கள் எழுதிய கம்பராமாயணத்தில் வேளாண் மரபுகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழாய்வுத் துறை தலைவராகப் பணியாற்றி வருபவர் திருமதி முனைவர். சா.சுதா அவர்கள். 'கம்பராமாயணத்தில் வேளாண் மரபுகள்' என்ற தலைப்பின் கீழ் அவர் எழுதிய ஆய்வு நூலை இன்று நம்மாழ்வார் அமைத்த வானகத்தில் அவரது நினைவிடத்தில் வெளியீடு செய்தார்.  


தொடர்ந்து அவர் பேசும் போது ''தமிழ் இலக்கியங்கள் நமது மண்ணையும் மரபையும் காலந்தோரும் மீட்கும் கருத்துகளையே செறிந்து விதைத்து வருகின்றன என்றும் குறிப்பாக கம்பராமாயணத்தில் இயற்கை வேளாண்மை குறித்த அறிய தகவல்களை செறிவாக கம்பர் பதிவு செய்துள்ளார் என்றும் தமிழர்கள் அதனை படிப்பதுடன் பின்பற்றும் போது நம்மாழ்வாரின் இயற்கை மீட்பு கருத்துகளோடு இன்னும் இணைந்து மரபுவழி வேளாண்மையை வழிநடத்தும் என்றும் கூறினார்.

நிகழ்வில் நூலைப் பதிப்பாக்கம் செய்த ஆதன் பதிப்பக ஆசிரியர் கருவை ந.ஸ்டாலின் அவர்களும் வானகத்தின் அறங்காவலர்களான இரமேஷ், டேவிட் அமலநாதன், கரிகாலன், செயலாளர் பிரேமா அவர்களும், நச்செள்ளை தமிழ்ப்பேராயப் பொறுப்பாளர்களும் பங்கேற்றுச் சிறப்பு செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad