கரூரில் பாஜகவின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 4 November 2023

கரூரில் பாஜகவின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை.


கரூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை இரண்டு நாட்கள் நவம்பர் 3,4  நடைபெற உள்ளது.  03.11.2023 மாலை  கரூர் பகுதிக்கு வருகை புரிந்த மாநிலத் தலைவர் அண்ணாமலையை கரூர் மாவட்ட பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றார். 


பாதயாத்திரையானது கரூர் திருமாநிலையூர் பகுதியில் இருந்து தொடங்கியது வழிநெடுக பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திந்து கொண்டு தாந்தோன்றிமலை பகுதியில் வாகனத்தில் நின்றபடி பரப்புரை செய்து யாத்திரையை நிறைவு செய்தார்.

அண்ணாமலை பேசுகையில், கொங்கு மண்டலத்தில் கரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது மக்களுக்கு சேவை செய்யும் அரசு ஆட்சிக்கு வந்தால் சங்ககாலத்தில் கரூர் இருந்தது போல் மாறிவிடும், கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நாட்டுக்கு உழைப்பதற்கும் நேர்மையான ஆட்சியை வழங்குவதற்கும் மக்களை தேடிக் கொண்டிருக்கிறோம். 


அரசியலில் இருந்து கொண்டு ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மக்களின் பணத்தை உறிஞ்சி எடுப்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது, அரசியலில் உள்ள அசுத்தத்தை சுத்தம் செய்யும் கடமை உங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுத்தால் தாக்கப்படுகிறார்கள்.ஏழை மக்களை மேலும் ஏழைகளாகவே ஆக்கிக் கொண்டுள்ளனர், திமுகவின் பொய் பிரச்சாரங்களுக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது.


இந்தியாவை பாதுகாக்கும் தலைவர் மோடி கடல் கடந்தும் தமிழை பற்றி யோசிப்பவர் தலைவர் மோடி அவர்கள், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில்  ஐந்தாவது நாடாக வளர்ந்துள்ளது 2027 க்கு பிறகு மூன்றாவது நாடாக மாறிவிடும் என்றும் வரும் 2024 ஆம் நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களுடன் மீண்டும் மூன்றாம் முறையாக மோடி அவர்கள் ஆட்சிக்கு வருவார் என்று பேசினார் என்று பேசினார்.


மேலும் இந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் பாஜக கோட்ட பொறுப்பாளர் கே பி இராமலிங்கம் கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபிநாத், சக்திவேல், முருகன், தெற்கு மாநகர தலைவர் ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad