கரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 4 November 2023

கரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் நீதியரசர் ஜிஎம் அக்பர் அலி (ஓய்வு) அவர்கள் வரவேற்றார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாண்புமிகு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாண்புமிகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.பி.ஆர்.ராஜா அவர்கள் முன்னிலை வகுத்தார், சென்னை மாநகர நூலக ஆணைய தலைவர் கவிஞர் திரு.மனுஷ்யபுத்திரன் நோக்கவுறை வழங்கினார். சிறப்பு பேச்சாளராக திரு.பீட்டர் அல்போன்ஸ், திரு நாஞ்சில் சம்பத், திரு.சுபவீரபாண்டியன் கருத்துரை வழங்கினார். 


கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர்  இரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு ரா.இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் திருமதி கவிதா கணேசன், கரூர் மாநகராட்சி ஆணையர் பா.சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் ம.ச.கண்ணதாசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி தா.தேன்மொழி, கரூர் ஒன்றிய குழு தலைவர் பா பாலமுருகன், காதப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. மு கிருபாவதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவின் நிறைவாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு மீ.தங்கவேல் இ.ஆ. ப அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


கலை பண்பாட்டுத் துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பாக கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad