நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் நிலையம் திறப்பு விழா. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 24 November 2023

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் நிலையம் திறப்பு விழா.


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, கரூர் மாநகராட்சி 46வது வார்டுக்கு  உட்பட்ட டி.செல்லாண்டிபாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட  தாந்தோணி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சுப்பிரமணியன்  அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

மேலும் கரூர் மாவட்டத்தில் 4.70 கோடி மதிப்பீட்டில் 15 பொது  சுகாதாரத் துறை கட்டிடங்கள்,நகர ஆரம்ப சுகாதார நிலையம்,புற நோயாளி பிரிவு கட்டிடங்கள், செவிலியர் குடியிருப்புகள்,துணை சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டுகளையும் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.தங்கவேல் அவர்கள், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.இளங்கோ அவர்கள், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு.மாணிக்கம் அவர்கள், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.சிவகாமசுந்தரி அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.தாரணி சரவணன் அவர்கள்,  மாநகராட்சி ஆணையர் திரு.சரவணகுமார் அவர்கள்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு. கண்ணன் அவர்கள், மாநகர் நல அலுவலர் திரு.  இலட்சியவர்ணா அவர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,  சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பயனாளர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad