அரவக்குறிச்சியில் தளபதி விஜய் நூலகம் திறப்பு விழா திறப்பு. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 23 November 2023

அரவக்குறிச்சியில் தளபதி விஜய் நூலகம் திறப்பு விழா திறப்பு.


கரூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரவக்குறிச்சி  சட்டமன்ற தொகுதியில் இன்று 23.11.2023  தளபதி விஜய் நூலகம் துவங்கப்பட்டது. தளபதியின் நூலகத்தில் தலைவர்களின் வரலாற்று புத்தகம், அறியவியல் புத்தகம் குழந்தைகள் சிந்தனை துளிகள் என குழந்தைகள் முதல் பெரியவர் வரை படிக்க கூடிய 600 மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. முதல் நாளான இன்று 10க்கும் மேற்பட்ட பெண்கள் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து கொண்டனர். 

தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறுகையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் புத்தக வாசிப்பு திறன் அதிகரிக்கவும் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கவும் நூலகம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


விழாவில் கரூர் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் மதியழகன் திறந்து வைத்தார், அரவக்குறிச்சி ஒன்றிய நிர்வாகி சதீஷ்குமார் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad