மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் 10 வரமாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 16 November 2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் 10 வரமாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்.


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றிய கிராமப்புற ஏழை மக்களுக்கு 10 வரமாக ஊதியம் வழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கடவூர் வட்டாரம், தரகம்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் தொகுதி முழுவதும் செல்கின்ற ஒவ்வொரு மக்கள் சந்திப்பிலும் மக்கள் தங்களால் தாங்க முடியாத விலைவாசி உயர்வு குறித்து வேதனையோடு பேசுகிறார்கள். குறிப்பாக சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.இந்த நெருக்கடியான நேரத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டமே கிராமப்புற ஏழை மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றுகிறது. அன்னை சோனியா காந்தி அவர்களின் தீவிர முயற்சியால் திரு. மன்மோகன் சிங் அவர்களின் மக்கள் நல அரசு செயல்படுத்திய மகத்தான திட்டம். உலகிலேயே வறுமை ஒழிப்பிற்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது என்று பேசினார் 


ஆர்ப்பாட்டத்தில் கடவூர் வட்டாரத் தலைவர் திரு.மலையாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.மாணிக்கம், திரு.ரத்தினம், திரு.கருப்பன், திருமிகு. வேதவள்ளி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரு. ராஜசேகர், திரு. சதீஷ் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad