கரூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் தேர்வு. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 16 November 2023

கரூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் தேர்வு.


கரூர் மாவட்டத்தில் 35 ஊர்க்காவல் படையினருக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 29 ஆண் மற்றும் 06 பெண் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கரூர் மாவட்டத்திற்குட்பட்ட விருப்பம் உள்ள ஆண்கள் மற்றம் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 வயது முதல் 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்களாக இருத்தல் வேண்டும். குற்ற பின்னனி இல்லாத நன்னடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 45 நாட்கள் தினசரி ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு அவர்கள் வசிக்கும் காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிய முழுச்சீருடை வழங்கப்படும். பெண்களுக்கு போக்குவரத்து பணிகள், பகல் ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் எனவும், ஆண்களுக்கு இரவு ரோந்து பணிகள், பாதுகாப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து பணிகளும் வழங்கப்படும். 


அதற்கான ஊதியம் இருபாலருக்கும் ஒரு நாளைக்கு ரூ.560/- வீதம் அவர்களின் பணி நாட்களுக்கேற்ப மாதத்தில் 5 நாட்களுக்கு மிகாமல் ரூ.2800/- மட்டும் ஊதியமாக வழங்கப்படும். மேலும் சிறப்பாக பணிபுரியும் ஊர்க்காவல் படையை சேர்ந்த நபர்களுக்கு தமிழசு முதல்வர் பதக்கம் மற்றம் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதிகள் அடிப்படையில் வழங்கப்படும்.


மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்களை கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 18.11.2023 முதல் இலவசமாக பெற்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கரூர் நகா காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை வட்டார தளபதி அவர்களின் அலுவலகத்திலும் மற்றும் கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திலும் 24.11.2023 மாலை 17.45 மணிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad