கரூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல்: வேட்பாளர்கள் செய்ய வேண்டியது என்ன?. அதிகாரி விளக்கம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 April 2024

கரூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல்: வேட்பாளர்கள் செய்ய வேண்டியது என்ன?. அதிகாரி விளக்கம்.


கரூர் மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர், தேர்தல் செலவின பார்வையாளர் போஸ் பாபு அல்லி மேற்பார்வையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் தெரிவிக்கையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தினால் அனைத்து அரசியல் கட்சிகளும் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

பிற வேட்பாளருக்கு ஏற்படுத்தாத வண்ணம் உங்கள் பிரச்சாரம் அமைய வேண்டும். தேர்தல் புகார்களுக்கு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் வாக்குச்சாவடி முகவர்களுக்கு உரிய அடையாள அட்டையுடன் வாக்குப்பதிவுக்கு முன்னதாக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் வந்து வாக்களித்து வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.


வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி பாதுகாக்கப்பட்டு வருகிறது அந்தப் பாதுகாப்பு பணியை நீங்கள் பார்த்து உறுதி செய்யலாம். மேலும் நாளை  இரண்டாவது கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தற்போது வேட்பாளர்கள் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் தேவைப்படும் எண்ணிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட உள்ளது.


வேட்பாளர்கள் முதலில் வங்கி கணக்கு துவங்கி அதன்மூலமாக மட்டுமே தேர்தல் செலவு கணக்குகளை மேற்கொள்ள வேண்டும். செலவுகளை குறிப்பிட்ட நேரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அரசியல் கட்சியினர் ஊர்வலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது செலவினத்தை கண்காணிக்கும் வகையில் வீடியோ சர்வலைன்ஸ் குழு செலவு செய்யும் கணக்குகளை கண்காணிக்கும். அவர்களோடு இணைந்து உங்களது செலவு கணக்குகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சி செய்யக் கூடாது. 


அவ்வாறு புகார் வரும் பட்சத்தில் அதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். உங்களது செலவு கணக்குகளை உங்கள் செலவு எல்லைக்குள் செலவு செய்ய வேண்டும். மேலும் இங்கு இருக்கும் தேர்தல் பார்வையாளர்கள் அல்லது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலமாகவும் நீங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறீர்கள்.


அதேபோல் தேர்தல் தொடர்புடைய புகார்களை சி- விசில் செயலி மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் எந்த ஒரு பணியையும் அனுமதி பெற்று செய்ய வேண்டும் அதை 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும் அதன் பிறகு வரிசைப்படி உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad