கரூர் நாடாளுமன்றத் தேர்தல் பணி - மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 24 March 2024

கரூர் நாடாளுமன்றத் தேர்தல் பணி - மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி

 


கரூர் நாடாளுமன்றத் தேர்தல் பணி - மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி




கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிகள்- வாக்குப்பதிவு நடவடிக்கைகள் குறித்து பொதுத்தேர்தல் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் தங்கவேல், தொடங்கி வைத்துப் வைத்தார்.



நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் அனைத்து அலுவலர்களும் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியற்ற வேண்டும். கரூர் மக்களவை தொகுதிக்குப்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 22 மண்டல அலுவலர்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 22 மண்டல அலுவலர்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 24 மண்டல அலுவலர்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 25 மண்டல அலுவலர்களும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 கூடுதல் மண்டல அலுவலர்களும். 101 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு அலுவலர்களாக நீங்கள் நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இங்கு பயிற்சி பெற்று வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு இப்பயிற்சியை வழங்க வேண்டும். எனவே. இங்கு சொல்லப்படுகின்ற அனைத்து தகவல்களையும் நீங்கள் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். கூறப்படும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல்அதைக்கேட்டு தெளிவுபெறவேண்டும்.

வாக்குப்பதிவு நாள் அன்று முதலில் வாக்குச்சாவடி மையத்தில் உள்ள முகவர்கள் முள்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்திக்காட்டப்பட வேண்டும். வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT எனப்படும் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டும் காட்டும் இயந்திரம் உள்ளிட்ட கருவியினை கையாளும் முறை குறித்தும் அனைவரும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்படும் பணியில் மிகுந்த கவனத்துடலும், அக்கறையுடனும் செயல்படவேண்டும் என்றார்.



மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தேர்தல் அலுவலர் சையது காதர், தனித்துணை ஆட்சியர் சைபுதின், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முகமது பைசல், கருணாகரன், சுரேஷ், தனலட்சுமி தேர்தல் வட்டாட்சியர் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad