குளித்தலை அருள்மிகு அருள்தரும் முற்றில்லா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா. - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 January 2024

குளித்தலை அருள்மிகு அருள்தரும் முற்றில்லா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா.


கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருள்தரும் முற்றில்லா முலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 25.1.2024 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் சுவாமிகள் சந்திப்பும் 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் காவிரி ஆற்றில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் குளித்தலையை சுற்றியுள்ள எட்டு திருக்கோயிலில் இருந்து சோமஸ்கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்,தொடர்ந்து 26.01.2024 காலை 11 மணிக்கு மேல் சந்திப்பும் சுவாமி புறப்பாடு நடைபெறும். விழாவில் அனைத்து ஆன்மீக அன்பர்களும் போர் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad