அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பொது மருத்துவ முகாம். - தமிழககுரல் - கரூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 17 November 2023

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பொது மருத்துவ முகாம்.


கரூர் மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவின் மூன்றாம் நாளான (16.11.2023) பொது மருத்துவ முகாம் கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ப.கந்தராஜா அவர்கள் கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் துவக்கி வைத்தார்கள். 

விழாவில் பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர்  திருமதி ரா.அபிராமி, கரூர் சரக துணைப்பதிவாளர் திரு.கே.எம்.ஆறுமுகம், கூட்டுறவு சார் பதிவாளர்கள், கள அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து வந்திருந்த மருத்துவர்கள் பொதுமருத்துவம், காது, மூக்கு, தொண்டைமருத்துவம், தோல் மருத்துவம், கண் சிகிச்சை மற்றும் பிஸியோதெரபி சிகிச்சை அளித்தார்கள், முகாமில் பொதுமக்களும் கலந்துகொண்டார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad