I
வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பாகவே, வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் முகவர் பெயரில் கூட்டாகவோ தனியே ஒரு வங்கி கணக்கு தொடங்கி அதில் தேர்தல் செலவினங்களை அக்கணக்கு மூலமாக மட்டுமே பராமரிக்க வேண்டும்.
தேர்தல் செலவினங்களை குறிப்பதற்கான குறிப்பேடு பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், வேட்பாளர் தேர்தல் செலவு கணக்குகளை கவனிப்பதற்காக கூடுதலாக ஒரு முகவரை நியமித்து கொள்ள வேண்டும். தேர்தல் தொடர்புடைய இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும். படிவம் 8 – தேர்தல் முகவர் நியமன படிவத்தினை பெற்று ஒரு வார காலத்திற்குள் பூர்த்தி செய்து திரும்ப தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். படிவம் -தேர்தல் முகவர் நியமனத்தை ரத்து செய்யும் படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவரிடம் தங்களது மாதிரி கையொப்பத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் வேட்பு மனுவுடன் கடந்த மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தினை சமர்பிக்க வேண்டும். படிவம் 26ல் வேட்பாளருக்கு எதிரான கிரிமினல் வழக்கு அல்லது கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற விபரம் குறிப்பிட்டிருப்பின் அதனை படிவம் சி1ல் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் வாக்குபதிவு நாளுக்கு முன்பு குறைந்தது மூன்று முறை செய்தித்தாள்களிலும், தொலைகாட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும்.மேற்படி படிவம் சி1ல் விளம்பரம் செய்ய வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் படிவம் சி3ல் நினைவூட்டு அனுப்பப்படும். இவ்வாறு விளம்பரம் செய்த விபரத்தினை படிவம்-சி4ல் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு சமர்பிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான தங்கவேல் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையத்காதர் தேர்தல் வட்டாட்சியர் முருகன் மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment