கரூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 21ஆவது பட்டமேற்பு விழா நடைபெற்றது. பட்டமேற்பு விழாவைக் கல்லூரி முதல்வர் முனைவர் அலெக்சாண்டர் தொடங்கிவைத்தார். 2021-2022 ஆம் கல்வியாண்டில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பட்டங்கள் வழங்கி பட்டமேற்பு விழா உரையாற்றினார்.
தனது உரையில், பட்டம் பெற்ற அனைவரையும் வாழ்த்தினார். முன்னேற்றத்திற்கான வெற்றியாக இன்று பெறும் பட்டம் அமையவேண்டும். தொடர்ந்து பயின்று போட்டித்தேர்வுகளை எழுதவேண்டும். மேற்படிப்பு பயில வேண்டும் என மாணவர்களின் உயர்விற்கான நற்கருத்துகளைக் கூறினார்,அனைத்துத் துறைகளையும் சார்ந்த 1461 நபர்கள் இப்பட்டமேற்பு விழாவில் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் கற்பகம் அனைத்துத் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பட்டமேற்கும் மாணவ மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment